Monday, 9 July 2012

பாரதியார் பாடல்கள் - நெஞ்சில் லுரமுமின்றி

பாரதியார் பாடல்கள் - புதிய ஆத்திசூடி


பாரதியார் பாடல்கள் - கண்ணம்மா என் குழந்தை

பாரதியார் பாடல்கள் - கண்ணம்மா என் காதலி

பாரதியார் பாடல்கள் - அகினி குஞ்சொன்று கண்டேன்

http://www.sas.upenn.edu/~vasur/gif/akkini.gif

பாரதியார் பாடல்கள் - தொண்டு செய்யும் அடிமை

பாரதியார் பாடல்கள் - ஞாயிறு

பாரதியார் பாடல்கள் - காக்கை சிறகினிலே நந்தலாலா

பாரதியார் பாடல்கள் - குயிலின் காதல் கதை

பாரதியார் பாடல்கள் - விடுதலை

பாரதியார் பாடல்கள் - நல்லதோர் வீணை செய்தேன்

பாரதியார் பாடல்கள் - நெஞ்சு பொருக்கு திலையே

பாரதியார் பாடல்கள் - பாரத தேசம்




பாரதியார் பாடல்கள் - கன்னமாவில் காதல்

பாரதியார் பாடல்கள் - பாரத நாடு

பாரதியார் பாடல்கள் - காணி நிலம் வேண்டும் பராசக்தி

பாரதியார் பாடல்கள் - செந்தமிழ் நாடெனும் போதினிலே

பாரதியார் பாடல்கள் - சுட்டும்விழி சுடர்

பாரதியார் பாடல்கள் - அச்சமில்லை

பாரதியார் பாடல்கள் - தமிழ்த்தாய்

பாரதியார் பாடல்கள் - அன்னையை வேண்டுதல்

பாரதியார் பாடல்கள் - மனதில் உறுதி வேண்டும்

பாரதியார் பாடல்கள் - தமிழ்


இது தான் காதலா??

இமைகளை மூடும்போதும்
இமைக்குள்ளே அவள் நின்றாள்

என் கனவாக
என் சுவாச காற்றாக
என் உடலில் ஓடும் உதிரமாக
என்னை தாலாட்டி தூங்கவைக்கும் தாயாக

என் நினைவலைகள் என்னையும்
கடந்து சிந்திக்கின்றன

ஒருவேளை இதைத்தான் காதல் என்று
கவிஞர்கள் கவி பாடினார்களோ

பயம்

தேவதைகளுக்கும் பயம் தான்
உன்னோடு அழகு போட்டியில் கலந்துகொள்ள
- தோற்றுவிடுவோமோ என்று...!

அழகு சிலை

அழகு சிலைகள் அனைத்தும்
- அசையாமல் இருக்க
ஒரு சிலை மட்டும் அசைய கண்டேன்
- என்னவள் கோவிலை சுற்றி வளம் வரும்போது...|

கொல்லாதே ப்ளீஸ்...!

உயிரோடு என்னை
தீ வைக்கும் உன்
கண்களிடம் சொல்லி விடு
கருகுவது என் உயிர் தான் என்று

இதையத்தை திருடிவிட்டாய்


உன் மனதை அறியும் முன்
என் மனதை திருடிவிட்டாய்...!

காதல் கவிஞன்

காதலில் ஜெயித்தவன் - காதலன் ஆவான்
காதலில் தோற்றவன் - கவிஞன் ஆவான்
இரண்டும் கலந்த காதல் கவிஞனாய் - நான்
நீ என்னை காதலித்து ஏமாற்றியதால்.

Sunday, 8 April 2012

அதிசிய ரோஜா

இரண்டு முறை பூக்கும் அதிசய ரோஜா -
முதல் பிறப்பு - அதன் செடியில்
மறு பிறப்பு - உன் முடியில்.

Tuesday, 6 March 2012

பாரதிதாசன் பாடல்கள் - மயில்

அழகிய மயிலே! அழகிய மயிலே
அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம்
கருங்குயி லிருந்து விருந்து செய்யக்,
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்,
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடு கின்றாய் அழகிய மயிலே!

உனதுதோ கைபுனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!

உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை
உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!

ஆடு கின்றாய்; அலகின் நுனியில்
வைத்தஉன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!
சாயல்உன் தனிச்சொத்து! ஸபாஷ்! கரகோஷம்!

ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆனஉன் மெல்லுடல், ஆடல், உள்உயிர்,
இவைகள் என்னை எடுத்துப் போயின!
இப்போது, 'என நினைவு' என்னும் உலகில்
மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன்;
நீயும் பெண்களும் 'நிகர்' என்கின்றார்!
நிசம்அது! நிசம்! நிசம்! - நிசமே யாயினும்
பிறர்பழித் தூற்றும் பெண்கள்இப் பெண்கள்!
அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்!
அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பார்க்கா திருப்பதற்கே
இயற்கை அன்னை, இப்பெண் கட்கெலாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ,
கறையொன் றில்லாக் கலாப மயிலே,
நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்!
இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்;
மனதிற் போட்டுவை; மகளிர் கூட்டம்
என்னை ஏசும் என்பதற் காக!

புவிக்கொன் றுரைப்பேன்; புருஷர் கூட்டம்,
பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி
திருந்தா வகையிற் செலுத்தலால், அவர்கள்
சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே!

பாரதிதாசன் பாடல்கள்

கருத்துரைப் பாட்டு

தலைவன் கூற்று

{வேந்தனிட்ட வேலையை மேற்கொண்டு செல்லும் தலைவன் தன் தேர்ப்பாகனை நோக்கி 'இன்று விரைந்து சென்று அரசன்இட்ட வேலையை முடித்து நாளைக்கே தலைவியின் இல்லத்தை அடைய வேண்டும்; தேரை விரைவாக நடத்து என்று கூறுவது.}

நாமின்று சென்று நாளையே வருவோம்;
வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்;
இளம்பிறை போல்அதன் விளக்கொளி உருளை
விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்
வளையல் நிறைந்த கையுடை
காற்றைப் போலப் கடிது மீள்வோம்;
இளையளை மாண்புற யான்மணந் துவக்கவே.

{குறுந்தொகை 189-ஆம் பாடல், மதுரை ஈழத்துப் பூதன்தேவன் அருளியது}


தலைவி கூற்று

{தலைவனை நினைத்துத் தான் துயிலாது இருத்தலைத் தோழிக்குத் தலைவி கூறியது.}

ஆர்ப்புறும் இடிசேர் கார்ப்பரு வத்துக்
கொல்லையின் மணந்த முல்லைக் கொடியின்
சிரிப்ª¢பன அரும்பு விரிக்கும் நாடனை
எண்ணித் துயில்நீங் கியஎன்
கண்கள் இரண்டையும் காண்பாய் தோழியே!

(குறுந்தொகை 186-ஆம் பாடல். ஒக்கூர் மாசாத்தி அருளியது,)


தோழி கூற்று

{தலைவன், தலைவியை மணம் புரியாமல் நெடுநாள் பழகி, ஒருநாள் வேலிப்புறத்திலே வந்து நிற்கிறான்! அவன் காதில் விழும்படி, தலைவியை நோக்கிக் கூறுகிறாள் தோழி; "தலைவன் நட்பினால் உன் தோள் வாடினாலும் உன் அன்பை அது குறைத்து விடவில்லை" என்று}

மிளகு நீள்கொடி வளர்மலைப் பாங்கில்
இரவில் முழுங்கிக் கருமுகில் பொழிய,
ஆண்குரங்கு தாவிய சேண்கிளைப் பலாப்பழம்

அருவியால் ஊர்த்துறை வரும்எழிற் குன்ற
நாடனது நட்புநின் தோளை
வாடச் செய்யினும் அன்பைமாய்க்காதே!

Tuesday, 21 February 2012

அம்மா

புரண்டு படுத்தால்
நாம் இறந்துவிடுவோமோ என்று
கருவில் இருந்த நமக்காக
தூக்கத்தை தொலைத்து விட்டு
இரவில் விழித்திருந்த சூரியன் - அம்மா...!

அம்மா

அம்மா (என் செல்ல அம்மாவுக்கு)
என் முகம் பார்க்கும் முன்னே என் மேல் காதல் கொண்டவள்.

என் உயிர் காக்க, சுவை மறந்து பத்திய சோறுண்டவள்.

ஈரைந்து மாதம் தன் கருப்பைக்குள் என்னை காத்தவள்.

எட்டி நான் உதைத்த போதும் அதில் இன்பத்தை மட்டுமே கண்டவள்.

உயிர் போகும் வலித் தந்தேன் அமைதியாக ஏற்றுக் கொண்டு என்னை இந்த உலகிற்கு அறிமுகப் படுத்தியவள்.

சொந்தங்கள் சூழ்ந்திருத்த போதும் மயங்கிய விழிகளுடன் என்னைத் தேடியவள்.

பெண் பிள்ளை என்றதும் பேரின்பத்தில் முத்த மழை பொழிந்தவள்.

கண் இமைக்குள் வைத்து என்னை காத்து வந்தவள்.

நான் சோறுன்ன நிலவை துணைக்கு அழைத்தவள்.

என் பிஞ்சுக் கரமப் பிடித்து எழுதக் கற்றுத் தந்தவள்.

என்னை அலங்கரித்து பார்த்து ஆனந்தப் பட்டவள்.

நான் கன்னி ஆனதும் கணவனை விட்டு விலகியவள்.

எனக்காக தன் சுகம் மறந்தவள். சுமை தெரியாமல் என்னை வளர்த்தவள்.

கற்பத்தில் வாயைக் கட்டியவள், என் எதிர்காலத்திற்க
்காக வயிற்றைக் கட்டியவள்.

சிக்கனமாய் செலவு செய்பவள். என் தேவைகைளை நிறைவேற்றுபவள்.

தன் சோகத்தை மறைத்தவள். சுகத்தை மட்டும் பகிர்ந்துக் கொண்டவள்.

பொறுப்புடன் வரன் பார்த்தவள். என் பிரிவு தாங்காமல் துடித்தவள்.

விழி நீரோடு எனக்கு விடைக் கொடுத்தனுப்பியவள்.

என் நினைவுகளோடு நாட்களை துரத்தி அடிப்பவள்.

விடுமுறை நாட்களில் எனக்காக வழி மீது விழி வைத்து காத்துக் கிடப்பவள்.

குறை இன்றி சீர் செய்தவள். பெற்றவர்களின் பேர் காக்கும் படி நடக்கும் பண்பை சொல்லித் தந்தவள்.

நன் உண்டான செய்தி அறிந்ததும் உள்ளம் பூரித்தவள்.

உள்ளங்கையில் என்னைத் தாங்கியவள்.

சிறப்பாக சீமந்தம் செய்தவள். அதை சொல்லி சொல்லி ஆனந்தப் பட்டவள்.

பிரசவ வலியில் நான் துடிக்கையில், அதை காண முடியாமல் பூ மனம் துடித்தவள்.

பிறந்தது பிள்ளை நிலா தாயானேன் அவள் சேய் நான்.

சுற்றங்கள் அனைத்தும் என் பிள்ளையை சூழ்ந்துக் கொண்டிருக்க,அவள் மட்டும் அருகில் வந்து என் கேசம் தடவிக் கொடுத்துக் கேட்கிறாள்

"உன் உடல் எப்படி இருக்கு என்று"

மீண்டும் குழந்தையானேன் அன்பின் உருவமான என் அன்னையின் மடியில்.